தடையை மீறி திரையிடப்படுமா சிந்துபாத்?

  கண்மணி   | Last Modified : 20 Jun, 2019 01:34 pm
sindhubaadh-from-21st-june

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அவருடைய மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள முதல் படம் சிந்துபாத். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி  உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கிய அருண்குமார் சிந்துபாத் படத்தை இயக்கியுள்ளார்.

நாளை (ஜூன் 21 ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிந்துபாத் படத்தை திரையிடக் கூடாது என ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தடை கோரி ஹைதராபாத் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

ஆனால், படத்திற்கான நீதிமன்ற தடை குறித்து எந்த  தகவலையும் சிந்து பாத் படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை.

மாறாக  சிந்துபாத் நாளை முதல் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்து வருகிறது. இந்நிலையில் தன்னுடைய மகன் சூர்யா நடித்த முதல் படம் திரைக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியும், மக்கள் செல்வனின்  படம் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ரசிகர்களும், நீதிமன்றத்தின் சாதகமான உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close