வெற்றிப்படம் எனக் கருதப்படும் "தும்பா" நாளை முதல் திரையிடல்!

  கண்மணி   | Last Modified : 20 Jun, 2019 03:11 pm
thumbaa-from-21-june

KJR ஸ்டியோஸ் தயாரிக்கும் தும்பா திரைப்படத்தில் 'கனா' தர்ஷன், 'கலக்க போவது யாரு' தீனா மற்றும் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு - நரேஷ் இளன், படத்தொகுப்பு- கலைவாணன் ஆகியோர் பணியாற்றியுள்ள இந்த படத்திற்கு விவேக் மெர்வின் மற்றும் அனிருத்  பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். மேலும் சந்தோஷ் தயாநிதி, பின்னனி இசை பணிகளை மேற்கொண்டுள்ளனர். காட்டு மிருகங்களால், நாயகன் நாயகி சந்திக்கும் பிரச்னைகளை கலப்பாக எடுத்து சொல்லும் இந்த படம் நாளை(21 ஜூன்) திரைக்கு வர உள்ளது.

நிறைய செலவு செய்து வித்தியாசமான கிராஃபிக்ஸ் காட்சிகளை உள்ளடக்கி மிகவும் நகைச்சுவையாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் நிச்சயம் பெறும் வெற்றி பெறும் என்று இப்படத்தின் பிரிவியூ காட்சியைக் கண்டவர்கள் கூறுகின்றனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close