விஜயின் மாஸ் நடனத்தில் நினைவு கூறத்தக்க படங்கள்!

  கண்மணி   | Last Modified : 20 Jun, 2019 06:17 pm
vijay-s-mass-dance

நடனப்புயல் பிரபு தேவாவின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிய நடனம் பெரும்பாலும் வெற்றியையே பெற்றது என்று சொல்லலாம். இவர்களின் கூட்டணியில் உருவாகிய போக்கிரி படத்தின் பாடல்கள் டான்சில் மாஸ் காட்டின என்றால் மிகையல்ல. குறிப்பாக ’ஆடுங்கடா என்ன சுத்தி’ பாடலில் விஜயும் பிரபு தேவாவும் ஆடிய நடனங்கள் ரசிகர்களை சுண்டி இழுக்கும் விதமாகவே அமைந்தது. 

இதனைத்தொடர்ந்து விஜயும் பிரபு தேவாவும் இணைந்த அடுத்த படம் வில்லு. இந்த படத்தில் நயன்தார நாயகியாக நடித்திருந்தார், பிரபு தேவாவின் இயக்கத்தில் விஜய் பம்பரமாக சுழன்று ஆடும் நடனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே இருந்து வருகிறது.வில்லு வில்லு பாடலில் குஷ்புவுடன் சேர்ந்து செம்ம குத்தாட்டம் போட்டிருப்பார் விஜய்.

 

கில்லி: தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத தளபதியின் படம் கில்லி. தமிழக பாரம்பரிய விளையாட்டான கில்லி விளையாட்டில் சாதிக்கும் தமிழக இளைஞனாக தனது அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தார் விஜய். இந்த படத்தில் நாயகி த்ரிஷாவுடனான அப்படிப்போடு பாடலில் மிக அருமையான நடனத்தை தந்திருப்பார் விஜய்.  

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் திரைக்கு வந்த  துப்பாக்கியானது தோட்டா வேகத்தில் வெற்றி பெற்ற படமாகும். இந்த படத்தில் காஜல் நாயகியாக நடித்திருந்தார். இதிலும் தனது அசத்தலான நடனத்தாலும் கலக்கியிருந்தார் விஜய்.

விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த படம் சச்சின், சுட்டித்தனமான இளஞனாக நடித்து இந்த படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார் விஜய். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அவர் ஆடிய துள்ளல் நடனம் இன்று ரசிகர்களின் கண்ணைவிட்டு நீங்காமல் உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close