இன்று( 22 ஜூன்) பிறந்த நாள் காணும் தளபதி

  கண்மணி   | Last Modified : 22 Jun, 2019 01:04 pm
today-vijay-s-birthday

தளபதி விஜய் 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி சென்னையில், பிரபல இயக்குனர்  எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களின் மகனாக பிறந்தார். இவரை பொதுவாக பிரபல நடிகர் என்றுதான் பலரும் அறிவோம் உண்மையில் இவர் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், நடன அமைப்பாளர், பின்னணிப் பாடகர் என பல திறமைகளை தன்னுள் கொண்டவர். 

விஜய் தனது 10 வயதிலேயே தனது திரைப்பயணத்தை துவங்கி விட்டார் . இவரது அறிமுகத்திரைப்படம்  1984 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி என்னும் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகராக விஜயகாந்த்தும், நடிகையாக விஜியும்  நடித்துள்ளனர்.

தளபதி ஏறத்தாழ 19 படங்களுக்கான பின்னணி பாடலை பாடியுள்ளார். அதோடு தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனம் கவரும் தளபதி தனது 63 வது படமான பிகில் படத்தில் நடித்து வருகிறார். தனது 64வது படத்திற்கும் தயாராகி விட்டார். இன்று பிறந்த நாள் காணும் தளபதிக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அதன்படி நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா என பதிவிட்டு பிகில் படத்தின் போஸ்டரை பதிவிட்டுள்ளார்.

 

அதேபோல விஜயின் சர்க்கார் படத்தில் வில்லியாக நடித்திருந்த வரலட்சுமி சரத்குமாரும் தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை,சர்க்கார் பட நினைவுகளுடன் பகிர்ந்துள்ளார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close