நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதே... ரஜினி வருத்தம்

  கிரிதரன்   | Last Modified : 22 Jun, 2019 10:13 pm
actor-s-association-election-rajini-regret-for-could-n-t-vote

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஏற்கெனவே திட்டமிட்டப்படி நாளை (ஜூன் 23) நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் நேரில் வந்து வாக்களிக்க முடியாதவர்கள், இன்று மாலைக்குள் தபால் வாக்கின் மூலம் தங்களது ஓட்டினை பதிவு செய்திருக்கலாம். ஆனால், தபால் வாக்கு தமக்கு தாமதமாக கிடைத்ததால், நடிகர் சங்கத் தேர்தலில் தம்மால் வாக்களிக்க முடியாமல் போனதாக நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மும்பையில் படப்பிடிப்பில் இருப்பதால், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க முயன்றேன். ஆனால், எனக்கு இன்று மாலை 6:45 மணியளவில் தான், தபால் வாக்கு கிடைக்கப் பெற்றது. இந்த தாமதத்தின் காரணமாக தம்மால் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. இதற்காக வருந்துகிறேன். இந்த துரதிருஷ்டம் எதிர்காலத்தில் நிகழக்கூடாது என நினைக்கிறேன்" என ரஜினி தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close