விறுவிறுப்பாக நடைபெறும் நடிகர் சங்கத் தேர்தல்!

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2019 11:59 am
south-indian-artist-association-election

பல்வேறு கட்ட பிரச்சனைகளுக்கு பின்னர், நடிகர் சங்கத் தேர்தல் மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பல்வேறு கட்ட பிரச்னைகளுக்கு பிறகு, நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்கி தீர்ப்பு வழங்கியது. ஆனால், பதிவாளர் தேர்தலுக்கு தடை கூறியுள்ளதால், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என்றும் எம்.ஜி.ஆர், ஜானகி கல்லூரி அன்றி வேறு கல்லூரியில் தேர்தலை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 

இதனால் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையிலேயே திரைத்துறையைச் சேர்ந்தோர் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். 

தேர்தலையொட்டி, பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close