நடிகர் சங்கத் தேர்தல்: நடிகர் விஜய் வாக்களித்தார்!

  முத்துமாரி   | Last Modified : 23 Jun, 2019 03:12 pm
nadigar-sangam-elections-vijay-casts-his-vote

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் சற்றுமுன் மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளிக்கு வந்து வாக்களித்தார். 

பல்வேறு கட்ட பிரச்சினைகளுக்கு இடையே நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பல நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வத்துடன் வாக்களித்து விட்டுச் செல்கின்றனர். 

அந்த வகையில் இளைய தளபதி விஜய், சற்றுமுன் தேர்தல் நடைபெறும் மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளிக்கு வந்து வாக்களித்தார். விஜய் வந்தவுடன் அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் ஒரு இடத்தில் கூடினர். இத்னால் அப்பகுதியில் பர்பரப்பு ஏற்பட்டது. 

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையில் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி என இரு பிரிவினர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close