விஜய் சேதுபதியிடம் வேண்டுகோள் விடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

  கண்மணி   | Last Modified : 23 Jun, 2019 01:27 pm
lakshmi-ramakrishnan-s-important-request-to-vijay-sethupathi

லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் எழுதி இயக்கியுள்ள ஹவுஸ் ஓனர் திரைப்படத்தில், பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்த படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர்.ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ம் தேதி திரைக்கு வர உள்ளது.

அதேபோன்று விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் திரைப்படம் ஜூன் 21ம் தேதி திரைக்கு வரும் என  எதிர்பார்த்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சார்ந்த சில பிரச்னைகளால் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது படத்தின் ரிலீஸ் குறித்து பதிவு செய்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன்:  தனது இயக்கத்தில் உருவாகியுள்ள ஹவுஸ் ஓனர் படத்தின் ரிலீஸின் போது சிந்து பாத் படத்தை வெளியிட வேண்டாம் என விஜய் சேதுபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

 

— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) June 23, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close