இளைஞர்கள், மக்களின் சமூக ஈடுபாட்டையும் ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்

  அனிதா   | Last Modified : 23 Jun, 2019 04:18 pm
the-media-should-also-express-the-social-involvement-of-young-people

பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகளை ஊடகம் மூலம் மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார். 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களித்து விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விவேக், " நடிகர் சங்க தேர்தல் வெறும் 2000 பேர்களை உள்ளடக்கிய சிறிய உறுப்பினர்களை கொண்டதாக இருந்தாலும், பெரிய நடிகர்கள் உள்ளிட்டோர் வருவதை மக்கள் காண ஆசைப்படுவார்கள் என்பதால் ஊடகங்கள் மக்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள். 

இதேபோன்று, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஏரி, குளங்களை தூர் வாருவது, மழை நீர் சேகரிப்பு திட்டங்களை தங்கள் வீடுகளில் செயல்படுத்துவது, மரம் நடுவது  போன்ற சமூக அக்கறை கொண்ட செயல்பாடுகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

நடிகர் சங்கத்திற்கு தமிழ்தாய் நடிகர் சங்கம் என பெயர் வைக்க வேண்டும் என நடிகர் விஜயகுமார் கோரிக்கை வைத்திருப்பது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர்கள் அனைத்து மொழிகளிலும் நடிப்பதால், கலைஞன் அனைத்து மக்களுக்கு சொந்தமானவன். தமிழ் தாய் சங்கம் என பெயர் வைத்தால் மகிழ்ச்சி தான் தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close