நடிகர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2019 06:18 pm
actor-association-election-voting-completed

சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
காலை 7.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவையொட்டி புனித எப்பாஸ் பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்தல் முடிந்தாலும் வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவு அறிவிக்கப்படாது. நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும்வரை வாக்குப்பெட்டிகள் பத்திரமாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

 நடிகர் சங்க தேர்தலில் சினிமா, நாடக நடிகர்கள் என மொத்தம் 3,171 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இதில், 1,604  நடிகர், நடிகைகள் வாக்களித்துள்ளனர். 5 மணி வரை  நடைபெற்ற தேர்தலில் ஆண்கள் - 1,164 பேர், பெண்கள் - 440 பேர் வாக்களித்துள்ளனர்.

1,100 பேர் தபால் வாக்குகளில் சுமார் ஆயிரம் பேர் வரை வாக்களித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தபால் வாக்குபடிவம் தாமதமாக வந்தததால் நடிகர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தால் வாக்களிக்க முடியவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close