கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி?

  கண்மணி   | Last Modified : 24 Jun, 2019 12:21 pm
kannadasan-birthday-today

தமிழ் நாட்டில் பிறந்து தனது கவித்திறனால் தரணியெங்கும் புகழ் பெற்றவர் கண்ணதாசன். இவர் காரைக்குடியில் உள்ள சிறுகூடல் பட்டி என்னும் ஊரில் சாத்தப்பன் செட்டியாருக்கும், விசாலாட்சிக்கும் 8 வது மகனாக பிறந்தவர். முத்தையா என்னும் இயற்பெயரை கொண்ட இவர், ஒருமுறை புதுகோட்டையில் செயல்பட்டு வந்த  திருமகள் என்ற  பத்திரிக்கை அலுவலகத்திற்கு  வேலை கேட்டுச் சென்றிருந்தார், அப்போது அந்த பத்திரிக்கையின் அதிபர் உங்கள் பெயர் என்ன? என வினாவ, அந்த காலகட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் புனைப்பெயர் வைப்பது வழக்கமான ஒன்று தான் என்பதால், தனக்கான புனைப்பெயரை அந்த மாத்திரத்திலேயே முடிவு செய்து கண்ணதாசன் என கூறியிருக்கிறார் கவிஞர். இப்பாடித்தான் முத்தையா என்கிற இயற்பெயரை கண்ணதாசன் என்னும் புனைப்பெயராக மாற்றி கொண்டுள்ளார் கண்ணதாசன். 

இவர் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எழுதி புகழ் பெற்றவர்.

பாடல் ஆசிரியராக மட்டுமில்லாமல் சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். அதோடு தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்து, சாகித்ய அகாதமி விருது பெற்ற பெருமைக்கு உரியவர் கண்ணதாசன். 

இவரின் திரைப்பட பாடல் ஆழ்ந்த கருத்துக்களை கொண்டதாகவும், கேட்பவரை கவரும் வகையிலும் அமைந்திருந்தன. மகாதேவி திரைபடத்தில் துவங்கிய இவரது தமிழ் சினிமா பயணம் நினைவு தூண்கள்  போல காலத்தால் அழிக்க முடியாத  பல பாடல்களை நமக்காக விட்டு சென்றுள்ளது. புகழ் பெற்ற கவிஞரான கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று( 24ஜூன்).

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close