இம்முறையாவது ரிலீஸ் ஆகுமா சிந்துபாத்? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

  கண்மணி   | Last Modified : 24 Jun, 2019 04:29 pm
sinbad-release-on-june-28th

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அவருடைய மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள முதல் படம் சிந்துபாத். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி  உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கிய அருண்குமார் சிந்துபாத் படத்தை இயக்கியுள்ளார்.

ஏற்கனவே இந்த படம் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு போட்டியாக மே 16ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தேதியில் ரிலீஸ் செய்யப்படாமல் ஜூன் 21ம் தேதிக்கு சிந்துபாத் ரிலீஸ் தேதி மற்றம் செய்யப்படது.

இதனிடையே  சிந்துபாத் படத்தை திரையிடக் கூடாது என ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தடை கோரி ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்ததால் ஜூன் 21ம் தேதியும் இப்படம் திரையிடப்படவில்லை.

இந்நிலையில் வரும் ஜூன் 28ம் தேதி சிந்துபாத் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறையாவது சிந்துபாத் திரையிடப்படுமா என்கிற எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close