கின்னஸ் சாதனை படைத்த ஒரே பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்.

  கண்மணி   | Last Modified : 27 Jun, 2019 11:46 am
director-vijay-nirmala-has-passed-away

விஜய நிர்மலா ஆந்திராவை சேர்ந்தவர். இவரின் முதல் சினிமா பயணம் அவருடைய 7ஆம் வயதில்  "மச்ச ரேகை"  என்ற தமிழ் படத்தில் 1950ம் ஆண்டு துவங்கியது. அதன்பின்னர் இவர், தமிழில் "எங்க வீட்டுப் பெண்", "பணமா பாசமா", என் அண்ணன், ஞான ஒளி மற்றும் உயிரா மானமா போன்ற திரைப்படங்களில்  நடித்துள்ளார். தமிழை தொடர்ந்து, ஆந்திராவை  பூர்விகமாகக்  கொண்ட விஜய நிர்மலா தெலுகு திரைப்படத்துறையில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் என பன்முக திறமைகளுடன் உச்சத்தை தொட்டுள்ளார்.  

ஆந்திர சினிமா உலகில் 44 படங்களை இயக்கிய ஒரே பெண் இயக்குனர் என்கிற பெருமைக்குரிய விஜய நிர்மலா. இந்த சாதனைக்காக 2002ல் கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவர் தமிழ்,  மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் விஜய நிர்மலா.

இவருக்கு தெலுங்கு திரை உலகின் உயரிய விருதான  "ரகுபதி வெங்கையா" விருது  2008ம் ஆண்டு வழங்கப்பட்டது. இவரது கணவர் கிருஷ்ணா மற்றும் மகன்  நரேஷ் இருவரும் பிரபல தெலுங்கு நடிகர்கள். ஐதராபாத்தில் வசித்து வந்த விஜய நிர்மலா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 73 வயதான விஜய நிர்மலா சிகிச்சை பலனின்றி இன்று காலை (27 ஜூன் )காலமானார்.இவரது உடலுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close