தல அஜித் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது 

  கண்மணி   | Last Modified : 27 Jun, 2019 12:58 pm
vaanil-irul-lyrical-video-from-thala-ajith-s-nerkonda-paarvai

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் இந்தி ரீமேக் தான் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை'. இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத், இப்படத்தை இயக்குன்வருகிறார். இசை - யுவன்சங்கர் ராஜா; ஒளிப்பதிவு - நீரவ்ஷா ஆகியோர் ஒப்பந்தமாகி பணியாற்றி வருகின்றனர்.

தல அஜித்துடன் இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்து,  பிற பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி  திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் வெளியாகி மாஸ் வெற்றியை பெற்ற நிலையில், இன்று நேர்கொண்ட பார்வை படத்தில்  இடம்பெற்றுள்ள ”வானில் இருள்” என்கிற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல், யுவன்சங்கர் ராஜா இசையில்,  உமாதேவியின் பாடல் வரிகளில், ரவுடி பேபி பாடலை பாடிய தீ’’யின் பின்னணி குரலில் உருவாகியுள்ளது.

அமிதாப் பச்சனை மிஞ்சிய 'தல' அஜித்; கர்ஜிக்கும் 'நேர்கொண்ட பார்வை' பட ட்ரைலர்!

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close