பிக்பாஸ் 3: கவினின் கேர்ள் பிரண்ட்ஸ் யாருனு தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 27 Jun, 2019 03:37 pm
does-know-the-girlfriends-of-bigg-boss-3-kavin

நேற்றைய எபிசோட் கண்ணீரும் சோகமுமாய் நிறைவடைந்தது. மோகன் வைத்யா மற்றும் ரேஷ்மாவின் சோக கதைகள், முன்னதாக மீரா மிதுனுக்கும் அபிராமிக்கும் இடையே நடந்த சண்டையென விறுவிறுப்பாக சென்றது.

இதற்கிடையே இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர் விஜய் டிவி நிறுவனத்தினர்; அதில் கவினுக்கு வாயை மூடி, சைகை மொழியில் பேசவும் என்கிற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

அதாவது, அதிகம் பேசும் கவின் பேசாமல் சைகை மூலம் தனது பெண் தோழிகளிடம் பேச வேண்டுமாம். அதோடு அந்த டாஸ்குக்கான அறிக்கையில் கவினின் பெண் தோழிகள் யாரெல்லாம் என்பதும் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதில் கவினை காதலிப்பதாக சொன்ன அபிராமி   அவருடன் லாஸ்லியா, சாக்‌ஷி, வனிதா, செரின் ஆகியோரிடம் பேசக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.  இவர்களின் கூட்டணிதான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் இன்று வரை நடைபெற்ற பிரச்னைகள் அனைத்திற்கும் காரணமாக இருந்தவர்கள். இவர்களுடன் கவின் பேசாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை இன்றைய எபிசோடில் காண்போம்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close