நகைச்சுவை நடிகர் சதீஷை தாக்கும் கொரில்லா: மேக்கிங் வீடியோ உள்ளே

  கண்மணி   | Last Modified : 27 Jun, 2019 07:05 pm
gorilla-chimp-song-making-video

தமிழ் சினிவாவின் முன்னணி நாயகர்களின் வரிசையில் இருக்கும் ஜீவாவின்  29-வது படம்  'கொரில்லா'. இதில் ஜீவாவின் ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நடித்துள்ளார். இவர்களுடன் காமெடி நடிகர் சதீஷ் மற்றும்  முக்கிய வேடத்தில் கொரில்லா குரங்கு ஒன்றும் நடித்திருக்கிறது.

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள  இந்தப் படத்தை டான் சாண்டி இயக்கியுள்ளார். மேலும் சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து ’ஜிக் ஜிக்கு ஜில்லாக்கி’ என்கிற பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலை அந்தோணி தாசன் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.  மேலும் இந்த வீடியோவில் பாடல் உருவான விதம் மற்றும் படத்திற்கான சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. அதில் கொரில்லா ஒன்று நாற்காலியை எடுத்து சதீஷ் மீது போடும் காட்சியும் இடம் பெற்றுள்ளது

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close