பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர் காலமானார்

  ராஜேஷ்.S   | Last Modified : 28 Jun, 2019 05:21 pm
the-famous-producer-distributor-pyramid-saimira-swami-nathan-died

பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பிரமிட் சாய்மீரா சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார். கடந்த 2007-ஆம் ஆண்டு ‘கண்ணாமூச்சி ஏனடா’ என்ற திரைப்படத்தை இணைந்து தயாரித்த சுவாமிநாதன், 2008-ஆம் ஆண்டு ‘முக்பீர்” என்ற ஸ்பை த்ரில்லர் இந்தி திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். மேலும், ரஜினியின் குசேலன், விஜய்யின் அழகிய தமிழ்மகன், அஜித்தின் பில்லா, மொழி, நான் கடவுள் உள்ளிட்ட திரைப்படங்களையும் சுவாமிநாதன் விநியோகித்துள்ளார்.

பிரமிட் சாய்மீரா சுவாமிநாதனின் மறைவுக்கு திரையுலகினர், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close