நயன்தாரா படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2019 09:54 pm
the-ban-on-the-removal-nayanthara-film

நடிகை நயன்தாரா நடித்துள்ள  ‘கொலையுதிர்காலம்’ திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை  நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலையுதிர்காலம் என்ற தலைப்புக்கு தனது தாயார் உரிமை வாங்கி வைத்திருப்பதாக பாலாஜிகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்கக்கோரி பட தயாரிப்பாளர் மதியழகன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர்காலம் நாவல் காப்புரிமை சட்டத்தில் பதியப்படவில்லை என்றும், காப்புரிமை சட்டத்தில் பதிவாகவில்லை என்பதால் கொலையுதிர்காலம் தலைப்பை படத்துக்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்த நீதிபதி, இந்த திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை  நீக்கி வெளியிட உத்தரவிட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close