இரண்டாம் பாகத்தை துவங்க உள்ளது டைம் மெஷின் பற்றிய கதை

  கண்மணி   | Last Modified : 29 Jun, 2019 12:53 pm
indru-nettru-naalai-2-shooting-start-on-september

இறந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்கு சென்றால் எப்படி இருக்கும்? என்னும் கற்பனையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ’இன்று நேற்று நாளை’.  இந்த படம் ரவிகுமார் இயக்கத்தில் , விஷ்ணு விஷால், ஆர்யா, மியா ஜார்ஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி இருந்தது.

கடந்த கால தவறுகளை சரி செய்ய முடியாதா, என்கிற ஏக்கம் பலரின் மனதில் பதிந்து கிடக்கும், நிரைவேற்ற இயலாத ஆசை. இதனை நிறைவேற்ற ஒரு டைம் மெஷின் இருந்திருந்தால்? என்னும் இயக்குனரின் கற்பனை திறனில் உருவான இந்த படம் 2015 ம் ஆண்டு திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ’இன்று நேற்று நாளை’ படத்தில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது என இந்த படத்தில் தயாரிப்பாளர் குமார் அவருடை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close