மாணவர்களிடம் நட்பாக பழகும் ராட்சசி:  விரைவில் திரைக்கு வர உள்ளது!

  கண்மணி   | Last Modified : 30 Jun, 2019 01:19 pm
raatchasi-from-july-5th

திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில்  இரண்டாம் அத்யாயத்தை துவங்கும் பல நடிகைகள் பொதுவாக அம்மா, அக்கா, வில்லி போன்ற கதாபாத்திரத்தில் தான் அதிகமாக நடிக்க ஓப்பந்தம் செய்யப்படுவார்கள்.

இந்த வரிசையில் மிகவும் வித்யாசமானவர் ஜோதிகா. பிரபல நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு பல வருடங்கள் சினிமா துறையிலிருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா. தற்போது  நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதன் படி இவர் நடித்த 36 வயதினிலே, காற்றின் மொழி உள்ளிட்ட படங்கள் பெண்கள் மத்தில் பெரிதும் பேசப்பட்ட படங்களாக அமைந்தது.

இவற்றை தொடர்ந்து ஜோதிகா அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கும் 'ராட்சசி' படத்தில் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்தில், ஜோதிகா அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார்.  

இதில், பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின்  ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மிடுக்கான ஆசிரியராக ஜோதிகா நடித்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில் ராட்சசி திரைப்படம் வரும் ஜூலை 5ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு  அறிவித்துள்ளது.

 

— DreamWarriorPictures (@DreamWarriorpic) June 30, 2019

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close