காலேஜ் கேண்டீன் தருணங்களை நினைவு கூறும் பாடல் உள்ளே

  கண்மணி   | Last Modified : 30 Jun, 2019 01:17 pm
the-canteen-tamil-video-song-from-dear-comrade

தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தனது அடுத்த திரைப்படமாக டியர் காம்ரேட் என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய  4 மொழிகளில் வெளியாக உள்ளது. 

பரத் கம்மா இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில், யாஷ் ரங்கினேனி தயாரித்துள்ளார். இதில் விஜய் தேவரகொண்டாவின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து ’கேண்டீன் சாங்க்' வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரி நினைவுகளில் பலராலும் மறக்க முடியாத நிகழ்வு கேண்டீன் கூத்துகள் தான்.அந்த மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் நினைவு கூறும் அளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் 4 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close