தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் பாரதிராஜா ராஜினாமா!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 04:19 pm
director-bharathiraja-suddenly-resigns-from-his-post

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் பாரதிராஜா திடீரென ராஜினாமா செய்துள்ளார். தேர்தலில் போட்டியிடாமல் ஒருமனதாக தேர்வான நிலையில் திடீரென அவர் பதவி விலகியுள்ளார்.

‘தேர்தலில் போட்டியிடாமல் தேர்வு செய்யப்பட்டால் ஏற்படும் சங்கடங்களை நான் உணர்வேன். ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன். மூத்த இயக்குநராக சங்க வளர்ச்சிக்கு என் வழிகாட்டுதலும், பேரன்பும் தொடரும்’ என்று  ராஜினாமா குறித்து பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார். 

பாரதிராஜா இயக்குநர் சங்க தலைவராக கடந்த மாதம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திரைப்பட இயக்குநர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close