விக்ரம் பட  ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு!

  கண்மணி   | Last Modified : 02 Jul, 2019 11:56 am
find-the-hidden-characters-played-by-chiyaanvikram-and-get-a-chance-to-be-a-part-of-the-kk-trailer-launch

சமீப காலமாக, படத்தில் மட்டுமல்ல, பட ட்ரைலர், இசை உள்ளிடவைகளின் வெளியீட்டு விழாக்களிலும் பல ட்விஸ்டுகளை வைப்பது வழக்கமாகி விட்டது. அந்த வரிசையில் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் கொலைகாரன், பார்த்திபனின் ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்கள் சம்மந்தப்பட்ட விழாக்களில் ரசிகர்களை அனுமதிப்பதற்கான போட்டிகள் நடத்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக தற்போது கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்  நிறுவனம் தயாரித்துள்ள, சியான் விக்ரமின் 56 வது திரைப்படமான 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா வரும் ஜூலை 3ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்கான போட்டியை அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.அதன்படி   வார்த்தை விளையாட்டில் ஒளிந்திருக்கும் விக்ரமின் கேரக்டர் குறித்த தகவலை கண்டுபிடிப்பவர்கள் நாளை நடைபெற உள்ள இந்த படத்தில் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுமாம். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close