தாலி கேட்கும் ஓவியா:  ப்ரோமோ உள்ளே!

  கண்மணி   | Last Modified : 02 Jul, 2019 05:16 pm
kalavani2-promo

பல கட்ட போரட்டங்களுக்கு பிறகு வருகிற ஜூலை 5ம் தேதி ’களவாணி 2’ திரைப்படம் வெளியாக உள்ளது. விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் கூட்டணியில் மீண்டும், உருவாகியுள்ள திரைப்படம் களாவாணி 2.   ஏற்கனவே, இந்தப் படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயனும்,  ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை நடிகர் மாதவனும் வெளியிட்டிருந்தனர்.

அதோடு இதன்  ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விமலிடம் நாயகி ஒவியா தாலி வேண்டும் என கேட்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

ஏற்கெனவே களவாணி முதல் பதிப்பில் விமல் மற்று ஓவியாவிற்கு திருமணமாக அவர்களுக்கு ஓர் குழந்தை இருப்பது போன்றுதான் காட்சியமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போதைய பதிப்பில் விமலிடம் ஓவியா தாலி வேண்டும் என்பது போல் காட்சியமைத்திருப்பது காட்சியை அல்லது திரைக்கதையை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் யூகித்து விடக்கூடாது என்று இயக்குநர் சற்குணம் முடிவு செய்து இயக்கியிருப்பதை நம்மால் எளிதில் கிரகிக்க முடிகிறது

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close