ஆடை திரைப்படம் குறித்த மேலும் மூன்று கெட்டப்புடன் அமலாபால் 

  கண்மணி   | Last Modified : 06 Jul, 2019 02:46 pm
aadai-trailer-release-today

இயக்குனர் ஏ. எல்.விஜயுடனான விவாகரத்து  பெற்றதற்கு பின்னர் அமலாபால் தனக்கான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையான ”ஆடை” என்கிற படத்தில் நடித்துள்ளார் அமலாபால்.

இந்த திரைப்படத்தை 'மேயாத மான்'  படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். அதோடு  'வி ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு  தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.  இந்த படத்தில் அதிகப்படியான கவர்ச்சி மற்றும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

இதனிடையே ஆடை படத்தின் டீசர் வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இன்று மதியம் இந்த படத்தின் ட்ரைலரை வெளியிட உள்ளதாக அமலாபால் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பதிவோடு சேர்த்து வெவ்வேறு தோற்றங்களுடனான மூன்று புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்துள்ளார் அமலா பால்.  

 

newstm.in
 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close