போஸ்ட்டரில் மாற்றம் செய்ய ரசிகர்களை அழைக்கும் விஜய் பட குழு! 

  கண்மணி   | Last Modified : 06 Jul, 2019 05:10 pm
bigil-movie-group-inviting-fans-to-make-change-in-poster

அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக 'விஜய் 63' உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

தெறி, மெர்சல் படங்களுக்கு வசனம் எழுதிய ரமணகிரி வாசன் இந்த படத்திற்கும் வசனம் எழுதி வருகிறார். ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம்  நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. 

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, தளபதி 63 படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இன்று வரை ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது அதோடு அந்த போஸ்ட்டரிலும் பல்வேறு மாற்றங்களை ரசிகர்கள் உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் இந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக  ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கதில் ரசிகர்கள் உருவாக்கிய பிகில் பட போஸ்ட்ரை #FanArtisticFriday #FanArtFriday என ஹேஷ் டேக் செய்து பதிவேற்றினால் விரைவில் போஸ்ட்டரில் மாற்றத்தை காணலாம் என பதிவிட்டுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close