பாஞ்சாலியை விட அதிக பாதுகாப்பாக  உணர்ந்தேன்: அமலா பால்! 

  கண்மணி   | Last Modified : 07 Jul, 2019 02:28 pm
i-felt-more-secure-than-panchali-amala-paul

இயக்குனர் ஏ. எல்.விஜயுடனான விவாகரத்து  பெற்றதற்கு பின்னர், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையான ”ஆடை” என்கிற படத்தில் நடித்து முடிள்ளார் அமலாபால்.

இந்த திரைப்படத்தை 'மேயாத மான்'  படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். அதோடு  'வி ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு  தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஆடை ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய அமலாபால் : இந்த படத்தில் நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும், அந்த காட்சிக்கான  படப்பிடிப்பின்போது எனக்கு படபடப்பாகத்  தான் இருந்தது. 

ஆனால் படக்குழுவினர் எனக்கு முழு பாதுகாப்பு அளித்தனர். படக்குழுவை சேர்ந்த 15 பேர் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்று கூறிய அமலாபால்.  பாஞ்சாலிக்கு கூட 5 கணவர்கள் தான் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால்  எனக்கு இந்த 15 பேரும் கணவர்கள் போல தேவையான முழு பாதுகாப்பை அளித்தனர் என கூறியுள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close