விஜய் ரசிகர்களை மிஞ்சிய சிம்பு ரசிகர்கள்! 

  கண்மணி   | Last Modified : 07 Jul, 2019 04:03 pm
500-ft-cut-out-for-simbu

பிரபல நடிகர் சிம்பு  அவருடைய தந்தையும் இயக்குநருமான டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான 'உறவை காத்த கிளி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இந்த படம் வெளியாகி 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  அதையடுத்து சிம்பு வெள்ளித்திரையில் கால்பதித்து 35 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி  மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தல்லாகுளம் செல்லும் சாலை ஓரத்தில் 500 அடி நீள பிரம்மாண்ட போஸ்டரை அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.

இது தொடர்பான பதிவுகள் ட்வீட்டரில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய் ரசிகர்கள் 440 அடி நீளத்திற்கு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close