2.0 திரைப்படத்தை சீனாவில் திரையிடுவதில் சிக்கல் 

  கண்மணி   | Last Modified : 08 Jul, 2019 05:12 pm
problem-with-screening-the-2-0-movie-in-china

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான 2.0 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான  இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி,பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது.  

ஜூலை 12ம் தேதி சீனாவில் திரையிடப்படும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில் பட விநியோகஸ்தர்கள் பின் வாங்கியதால் சீனாவில் 2.0வை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு ஜூலை 19ம் தேதி ’தி லயன் கிங்’ சீனாவில் திரையிடப்பட உள்ளதால் 2.0 படத்திற்கான வசூல் பாதிக்கப்படலாம் என்கிற அச்சத்தில், தேதி குறிப்பிடாமல் 2.0 பட ரிலீஸை தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close