பிக் பாஸ் வனிதாவின் மூன்றாவது கணவரா இவர்?

  கண்மணி   | Last Modified : 10 Jul, 2019 12:39 pm
who-is-the-third-husband-of-bigg-boss-vanitha

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக  பங்கேற்றுள்ளவர் வனிதா. இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமானவர்.  இரண்டாவது கணவரை பிரிந்த பிறகு வனிதா 'எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி,கமல்,' என்ற படத்தை நடன இயக்குனர் ராபர்டுடன் இணைந்து தயாரித்திருந்தார்.

இந்நிலையில் வனிதா, ராபர்டை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது. இதனை வனிதாவும் ஒப்புக்கொண்டார்.

ஆனால் இது குறித்து சமீபத்தில் பேசியுள்ள ராபர்ட், படத்தின் விளம்பரத்திற்காக வனிதா தன்னை திருமணம் செய்து கொண்டதாக பொய் கூறினார் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடன இயக்குனரான ராபர்ட் அவரது கையில் வனிதா என பச்சை  குத்தியுள்ள புகைப்படம்  சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close