விஜய் திரைப்படத்தில் இணைந்துள்ள கால்பந்து வீரர்! 

  கண்மணி   | Last Modified : 11 Jul, 2019 01:00 pm
bigil-movie-update

அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக 'பிகில்' உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும் இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

அதோடு தெறி, மெர்சல் படங்களுக்கு வசனம் எழுதிய ரமணகிரி வாசன் இந்த படத்திற்கும் வசனம் எழுதி வருகிறார்.

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும்  இந்த படத்தில் ஹாலிவுட் படங்களில் விளையாட்டு ஒருங்கிணைப்பாராக பணியாற்றியுள்ள எமி மெக்டெனல் இணைந்துள்ளார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில், தற்போது கேரளாவை சேர்ந்த கால்பந்து வீரரான  ஐஎம் .விஜயன் "பிகில்" படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே இவர் கொம்பன் திமிரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close