ஏ சான்றிதழ் வாங்கிய ஆடை படத்தில் பி சுசிலா பாடியுள்ள தெய்வீக பாடல்! 

  கண்மணி   | Last Modified : 11 Jul, 2019 06:34 pm
the-divine-song-sung-by-p-susila-in-aadai

இயக்குனர் ஏ. எல்.விஜயுடனான விவாகரத்தை பெற்றதற்கு பின்னர் அமலாபால் தனக்கான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையான ”ஆடை” என்கிற படத்தில் நடித்துள்ளார் அமலாபால்.

இந்த திரைப்படத்தை 'மேயாத மான்'  படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். அதோடு  'வி ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு  தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்த படத்திலிருந்து வெளிவந்த டீசர் மற்றும் ட்ரைலரில் அதிகப்படியான கவர்ச்சியும் ஆபாச வசனங்களும் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ரத்னகுமார் தனது ட்வீட்டர் பக்கத்தில், "ஆடை திரைப்படத்தில் பி.சுசிலா 70 வருடங்களுக்கு முன் பாடிய தெய்வீக பாடலை பாடியுள்ளார். இது எங்கள் பட  குழுவிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்" என பதிவிட்டுள்ளார்.   இயக்குனரின் இந்த பதிவு ஆடை படம் குறித்த எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close