இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை காலமானார்!

  கண்மணி   | Last Modified : 12 Jul, 2019 10:59 am
director-pa-ranjith-s-father-passed-away

அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலக்கு அறிமுகம் ஆனவர்  பா.ரஞ்சித். அதன்பின்னர் மெட்ராஸ், ரஜினியின் கபாலி, காலா, உள்ளிட்ட  ஹிட் படங்களை அடுத்தடுத்தது கொடுத்துள்ளார். இவரது தந்தை பாண்டுரங்கன், வயது 63. இவர் உடல்நிலை குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருதுவ மனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.  

 இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  பா.ரஞ்சித்தின் தந்தையான பாண்டுரங்கன் இன்று அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு  இன்று மாலை 5 மணி அளவில் அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தில் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close