கரகாட்டக்காரன்2 வில் அறிமுகமாகும் சொப்பண சுந்தரி 

  கண்மணி   | Last Modified : 14 Jul, 2019 04:25 pm
karakaddakaran-2-shooting-start-soon

கங்கை அமரன் இயக்கத்தில் 1989ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி திரைக்குவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் கரகாட்டக்காரன் .

 இந்த திரைப்படம் ராமராஜனின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், கனகா என்னும் நாயகியையும் திரையுலகிற்கு அறிமுகம் செய்த திரைப்படமாகும். இளையராஜாவின் இசையில் அமைந்த இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன.

அந்த காலக்கட்டத்தில் நகைச்சுவை நடிகர்களில் மிகப்பிரபலமாக இருந்த கவுண்டமணி- செந்தில் இணையின் காமெடியும் இந்த படம் வெற்றி பெற  ஒரு காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

 இவர்களின் வாழைப்பழ காமெடியும், 'காரை வச்சுருந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சுருக்கா' என்கிற வசனம்  இன்றும் நம்முடன் மீம்ஸ் வடிவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என பல வருடங்களாக ரசிகர்கள் எதிர் பார்த்திருந்த நிலையில் கரகாட்டக்காரன் 2 திரைப்படத்தை விரைவில் உருவாக்க உள்ளதாக கங்கை அமரன் பேட்டியளித்துள்ளார்.

அதோடு  மிக மர்மமாக இருந்த சொப்பண சுந்தரி யார் என்பதையும் இரண்டாம் பாகத்தில் சொல்ல இருக்கிறாராம் கங்கை அமரன்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close