ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ராட்ஷசன் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள் இன்று. 

  கண்மணி   | Last Modified : 17 Jul, 2019 11:53 am
today-vishnu-vishal-s-birthday

வெண்ணிலா கபடி குழு என்னும் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான கிரிக்கெட் வீரர் விஷ்ணு விஷால். இவர் வேலூரில் சூலை 17, 1984ம் ஆண்டு பிறந்தவர்.  அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட விஷ்ணு , சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதையும் பெற்றார்.

இதை தொடர்ந்து பலே பாண்டியா,துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார்.  நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இருக்கும் விஷ்ணு விஷால் நடித்த ராட்ஷசன்  திரைப்படம்  மகத்தான வெற்றியை பெற்று கொடுத்தது.

இதனை தொடர்ந்து தற்போது ஜகஜ்ஜால கில்லாடி, எப்  ஐ ஆர் , இன்று நேற்று நாளை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்த ராட்ஷசன் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள் இன்று. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close