சமந்தா படத்தை வாங்க சீன நிறுவனம் தீவிரம்!

  கண்மணி   | Last Modified : 18 Jul, 2019 06:10 pm
chinese-company-to-buy-samantha-s-movie

சமந்தா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ஓ பேபி . 2014 -இல் வெளிவந்த கொரிய மொழி காமெடித் திரைப்படமான‌ 'மிஸ் கிராணி' படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை BV நந்தினி ரெட்டி  இயக்கத்தில், சுனிதா டாடி தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் நடிகை லட்சுமி, ராவ் ரமேஷ் , நாகா சௌர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 70 வயதான பாட்டி லட்சுமி, 25 வயது சமந்தாவாக மாறிய பின் நடக்கும் சுவராஸ்யமான நிகழ்வுகள் தான் இந்த படத்தின் கதை.  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்த படம் இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் கதை பிடித்து போனதால் சீனாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை வாங்க மும்மரம் காட்டி வருவதாக தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close