பாட்டில் சேலன்ஜ் மூலம் தண்ணீர் பஞ்சத்தை சுட்டி காட்டியுள்ள வீடியோ! 

  கண்மணி   | Last Modified : 18 Jul, 2019 06:49 pm
video-showing-the-water-shortage-by-the-bottle-challenge

இணையதளங்களில் சமீபகாலமாக பாட்டில் சேலஞ்ச் என்னும் பெயரில் மூடியை தொடாமல் திறக்கும் வீடியோக்களை பலரும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஏற்கனவே பாலிவுட் ஸ்டார்கள் பலரும் இந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

அந்த வரிசையில், பவன் அலெக்ஸ் என்பவர் உருவாகியுள்ள வீடியோவை தனது ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி , அந்த வீடியோவில் , பாட்டிலுக்கு பதிலாக தண்ணீர் குழாய் இருக்கிறது. அதனை திருகியவுடன் தண்ணீருக்கு பதிலாக காற்று வருகிறது. கூடவே "தண்ணீர் இருந்தால் தான் பாட்டில் இருக்கும்" என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை அவ்வப்போது மழை தலையை காட்டி சென்றாலும் இன்னும் பெரும்பலான பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தீரவில்லை  என்னும் அவலத்தை கூறும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close