சினிமா தொழிலாளர்களுக்கு ஒரு நற்செய்தி: குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை!

  கண்மணி   | Last Modified : 19 Jul, 2019 11:44 am
scholarships-for-cinema-workers-child

சினிமா சார்ந்த பணிகளை செய்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான ஆணையை மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்த ஆணையின்படி சினிமா தொழிலாளர்கள் மற்றும் பீடி, சுண்ணாம்புக்கல்,டோல மைட் சுரங்க தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.

மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை கல்வி வரை முறையே ரூபாய் 250 முதல் 15 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி தொகையை பெறுவதற்கு " www.scholarships.gov.in" என்ற தேசிய இணைய தள பக்கத்தின் வாயிலாக ஆகஸ்ட் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த  உதவித்தொகை பெற மாணவர்களின் பெயரில் பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்க வேண்டும். அந்த கணக்கோடு ஆதார் எண் இணைந்திருப்பது கட்டாயம். மேலும் தகவல்களை பெற 0462 - 2578266 என்ற எண்ணிலும், scholarship 201718 tvI@gmail.com என்ற இ - மெயில் முகவரியின் மூலமும் தெரிந்து கொள்ளலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close