புது வரவு : இந்த வாரம் 3 படங்கள் ரிலீஸ்!

  பால பாரதி   | Last Modified : 26 Apr, 2018 01:49 pm

சினிமா ஸ்ட்ரைக் முடிந்து எல்லாம் சுமூகமாக முடிந்து, மீண்டும் தமிழ் சினிமா வெகமெடுத்திருக்கும் நிலையில், இந்த வார ரேஸில் நான்கு படங்கள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அரவிந்த்சாமியின் ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’படம் ரேஸிலிருந்து விலகிக் கொண்டது. என்வே, விக்ரம் பிரபுவின் ’பக்கா’, சாய் பல்லவியின் ’தியா’, மற்றும் புதுமுகங்களின் ’பாடம்’ என, நாளை (வெள்ளிக்கிழமை) மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின்றன. .

பக்கா : நடிகர் திலகத்தின் பேரனும், இளைய திலகம் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருக்கும் 'பக்கா' படத்தில் நிக்கிகல்ராணியும், பிந்துமாதவியும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், 'நிழல்கள்' ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி, முத்துக்காளை, சிசர்மனோகர், சுஜாதா, 'நாட்டாமை' ராணி, சாய்தீனா ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சூர்யா சூர்யா இயக்கியுள்ளார்.தோனி ரசிகரான விக்ரம் பிரபுவுக்கும், ரஜினி ரசிகையான நிக்கி கல்ராணிக்கும் இடையே நடக்கும் செல்ல சண்டைக்கு நடுவே. பிந்து மாதவி புகுந்து ஆட்டையை கலைக்கப் பார்ப்பது தான் கதை!

தியா : ’பிரேமம்’ மலையாளப் படத்தின் வாயிலாக தென்னிந்திய ரசிகர்களின் பிரேமத்திற்குரிய நடிகையாக மாறியிருக்கும் சாய் பல்லவி, தமிழில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்தப் படத்தை, பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விஜய் இயக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சாய் பல்லவி ஜோடியாக நாக ஷவ்ரியா நடித்திருக்கிறார். கதையின் கருவை தாங்கிப் பிடிக்கும் கதாபாத்திரத்தில் பேபிவெரோனிகா நடித்திருக்கிறார்.மேலும் நிழல்கள் ரவி, ரேகா, ஜெயக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ’கருவில் இருக்கும் குழந்தையைக் கலைக்கும் உரிமை யாருக்கும் இல்லை!’ என்கிற கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லும் இந்தப் படத்துக்கு, முதலில் ’கரு’ என்கிற மிகப்பொருத்தமான டைட்டிலை தான் வைத்திருந்தனர். ஆனால், இந்த டைட்டிலுக்கு வேறொருவர் சொந்தம் கொண்டாடி கோர்ட்டுக்குப் போனதால், கடைசி நேரத்தில் ’தியா’ என பெயர் மாற்றும்படியானது.

பாடம் : புதுமுகங்கள் விஜித் நாயகனாகவும்,மோனோ நாயகியாகவும் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரோல் ஆன் பிலிம்ஸ் சார்பில் ஜிபின் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கியுள்ளார். பள்ளிப் பருவத்தில் ஏற்படும் நட்பு, காதலாக மாறுவதால் எற்படும் விளைவுகளைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close