தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து புதிய பாடல் 

  கண்மணி   | Last Modified : 20 Jul, 2019 12:35 pm
thee-mugam-dhaan-song-from-nerkonda-paarvai

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் இந்தி ரீமேக் தான் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை'. இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத், இப்படத்தை இயக்குகிறார். இசை - யுவன்சங்கர் ராஜா; ஒளிப்பதிவு - நீரவ்ஷா ஆகியோர் ஒப்பந்தமாகி பணியாற்றி வருகின்றனர்.

தல அஜித்துடன் இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் 

சமீபத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலரை தொடர்ந்து,  நேர்கொண்ட பார்வை படத்தில்  இடம்பெற்றுள்ள ”வானில் இருள்” என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள தீம் சாங்கை இன்று வெளியிட உள்ளதாக தயரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close