நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்

  Newstm Desk   | Last Modified : 22 Jul, 2019 10:06 am
rajinikanth-supports-surya-for-education-policy

புதிய கல்விகொள்கை கருத்து குறித்து நடிகர் சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டது என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். 

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது பல்வேறு சர்ச்சையை எழுப்பியுள்ளது. மேலும், தமிழகத்தில் நடிகர் சூர்யாவுக்கு, அரசியல் கட்சியினர் திரையுலகினர் பலர் ஆதரவுக்குரல் எழுப்பியுள்ளனர். 

சென்னையில் நடைபெற்ற 'காப்பான்' பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், "சூர்யாவின் புதிய கல்விகொள்கை கருத்து குறித்து நான் பேசியிருந்தால் பிரதமர் மோடிக்கு கேட்டிருக்கும் என்று முன்னதாக பேசியவர்கள் கூறினார்கள். ஆனால், முன்னதாகவே சூர்யா பேசியது மோடிக்கு கேட்டுவிட்டது. 

நடிகர் சூர்யா மிகச்சிறந்த நடிகர். பன்முகம் கொண்டவர். மாணவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை நேரில் கண்டு அவர்களுக்கு உதவி செய்து வருகிறார். அவர் ஆற்றிய பணிக்காக எனது பாராட்டுகள்" என்று பேசியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close