ரஜினியின் ‘தர்பார்’: ரசிகர்களுக்கு பொன்னான வாய்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2019 07:51 pm
rajinikanth-s-dharbar-opportunity-for-fans

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தயாராகிவரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் போஸ்டர்களை உருவாக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

ரசிகர்கள் உருவாக்கும் சிறந்த போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துள்ளார். HD-ல் புதிய புகைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு ட்விட்டர் பக்கத்தில் லிங்க் ஒன்றையும் முருகதாஸ் கொடுத்துள்ளார்.

லைகா நிறுவனத்தின் தர்பார் திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வரும் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.  முன்னதாக, இன்றிரவு 7 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக, இயக்குநர் முருகதாஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close