'இந்தியன் 2' படத்தில் கமலுடன் நடிக்க ஓர் அறிய வாய்ப்பு!

  கண்மணி   | Last Modified : 27 Jul, 2019 02:28 pm
opportunity-to-casting-in-indian-2

கமல்ஹாசன், நடிப்பில் 1996ல் திரைக்கு வந்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன் ஆகும்.  இந்தப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு  இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் படத்தின் இயக்குனர் சங்கர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றி வருகிறார்.  மேலும்  இந்தியன் 2 படத்தில் நடிக்க துணை  நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா  நிறுவனம் புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் எவ்வித வயது வரம்புமின்றி துணை கதாபாத்திரங்களில் நடிக்க ‘ஆர்வமுள்ள, நடிப்பில் தேர்ந்த’ நடிகர், நடிகையர்கள் தங்களது சுய விவரங்களை குறிப்பிட்ட இமெயிலுக்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close