தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் ஜோதிகா அதிரடி!

  கண்மணி   | Last Modified : 27 Jul, 2019 02:02 pm
jackpot-telugu-trailer

பிரபல நடிகை ஜோதிகா அவருடைய கணவரான சூர்யாவின், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள  'ஜாக்பாட்' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை  'குலேபகாவலி' திரைப்படத்தை இயக்கிய கல்யாண் என்பவர் இயக்கியுள்ளார்.

காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் தமிழ் ட்ரைலரை சூர்யா அவருடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதிரடி கொள்ளைக்காரிகளாக ஜோதிகா மற்றும் ரேவதி நடித்துள்ள ஜாக்பாட் படத்தின் ட்ரைலரில், ஜோதிகா முதன் முறையாக ஆக்ஷன் நாயகியாக  மாஸ் காட்டியுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு மொழி ட்ரைலரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close