ரவுடி பேபி தனுஷின் பிறந்த நாள் இன்று 

  கண்மணி   | Last Modified : 28 Jul, 2019 12:26 pm
today-dhanush-birthday

'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலம் 2002ல் நாயனாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவரது இளமை தோற்றம் காரணமாக பெரும்பாலான படங்களில் மாணவனாக நடித்து இளைய சமூகதினரின் பேராதரவை பெற்றார். இவர் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் போன்ற படங்களின் மூலம் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு வந்த புதுப்பேட்டை இவரது பரிமாணத்தை அடுத்த கட்டிடத்திற்கு எடுத்து சென்றது என்றே சொல்லலாம். நடிகராக மட்டுமல்லாம் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தன்னை தரம் உயர்த்தி கொண்ட தனுஷ் சமீபத்தில் மாரி 2 படத்தில் பாடிய ரவுடி பேபி பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

சென்னையை சொந்த ஊராக கொண்ட தனுஷ்,  இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனாக   ஜூலை 28 1983ம் ஆண்டு பிறந்தார். இளைமையில் துவங்கி இன்று வரை பல விருதுகளை குவித்து வரும் தனுஷின் 36வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close