பிக் பாஸ் சரவணனின் செயலால் கொந்தளித்த சின்மயி 

  கண்மணி   | Last Modified : 28 Jul, 2019 01:41 pm
chinmayi-anger-by-the-action-of-bigg-boss-saravanan

பிரபல பாடகி சின்மயி இவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் தொடர்பாக தனது எதிர்ப்பை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தெரிவித்தது வருகிறார். அதோடு பிரபல பாடலாசிரியராக வைரமுத்து முத்து மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களையும் கொடுத்த வண்ணம் இருக்கும் இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியளராக இருக்கும் நடிகர் சரவணனை கண்டித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

நேற்று நடைபெற்ற பிக் பாஸ் ஷோவில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணித்தேன் என சரவணன் கூற அதை கேட்ட பார்வையாளர்கள் பலத்த கைத்தட்டுன் வரவேற்பை வெளிப்படுத்தினர்.

இந்த வீடியோவை பார்த்த சின்மயி; பெண்களை உரசுவேன் என ஒரு பிரபல நடிகர் சொல்வதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வது கண்டிக்க தக்க விஷயம் என கூறியுள்ளார். அதோடு இந்த அசிங்கத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் எந்தவித தயக்கமும் இன்றி ஒளிபரப்பியது கேவலமாக இல்லையா? என கோபமாக பதிவிட்டுள்ளார் சின்மயி. 

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close