மீனவர்களிடம் பேரம் பேசாதீர்கள் : பிரித்விராஜ் வேண்டுகோள்! 

  கண்மணி   | Last Modified : 30 Jul, 2019 01:40 pm
don-t-bargain-withfishermen-prithviraj

கேரளாவில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கனமழையின் காரணமாக மிக பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. மிகவும் ஆபத்தான அத்தகைய சூழலில் கேரளாவை சேர்ந்த மீனவர்கள் மக்களின் உயிரை காப்பாற்றும் மகத்தான சேவையை எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி செய்தனர்.

ஒருவருடம் கடந்துள்ள நிலையில்  மீனவர்களின் சேவையை நினைவு கூறும் வண்ணமாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ் , வெள்ளம் சூழ்ந்த அந்த நாட்களில் தன்னலம் இன்றி செயல்பட்ட மீனவர்களே உண்மையான ஹீரோக்கள் என பாராட்டியுள்ளார்.

மேலும் பேசிய பிருத்விராஜ் மீன் விற்பனையின் போது மீனவர்களிடம் பேரம் பேசாமல் நாம் மீன்களை வாங்குவதே இல்லை. ஆனால் கேரளாவை வெள்ளம் சூழ்ந்த நேரத்தில் ஒரு மீனவர் கூட காசு கொடுத்தால் தான் படகில் உங்களை ஏற்றுவேன் என கூறவில்லை . எனவே இனிமேலாவது மீனவர்களிடம் பேரம் பேசாமல் மீன்களை வாங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  

newstm.in
 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close