துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட தல அஜித்!

  அனிதா   | Last Modified : 01 Aug, 2019 12:06 pm
actor-ajith-participates-in-shooter-competition

கோவையில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமாருக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   

கோவை காவலர் பயிற்சி மையத்தில் உள்ள ரைபில் கிளப்பில், தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் சார்பில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரிவுகீழ் நடைபெற்று வரும் இப்போட்டி கடந்த 28ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 10 எம் ஏர் பிஸ்டல் போட்டியில் நடிகர் அஜித்குமார் சென்னை ரைபிள் கிளப் சார்பில் பங்கேற்றார். நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரசிகர்கள் சமூகவலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close