முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் ஜோதிகா : எப்படி தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 01 Aug, 2019 01:23 pm
jyothika-is-on-the-list-of-leading-actors

பிரபல நடிகை ஜோதிகா அவருடைய கணவரான சூர்யாவின், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள  'ஜாக்பாட்' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை  'குலேபகாவலி' திரைப்படத்தை இயக்கிய கல்யாண் என்பவர் இயக்கியுள்ளார்.

காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் ,தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 2ம் தேதி திரைக்கு வர உள்ளது.  இந்நிலையில் இந்த படம் குறித்த சுவாரசிய  தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இதுவரை முன்னணி நடிகர்களின் படங்களுக்கு  மட்டுமே திரையரங்குகளில் அதிகாலை  காட்சிகள் வைக்கப்பட்டு வந்தன . தற்போது ஜோதிகாவின்   'ஜாக்பாட்' திரைப்படமும் அதிகாலை முதல் காட்சி துவங்கும் என அறிவிக்கப்பட்டு சென்னையில் உள்ள சில பிரபலமான திரையரங்குகளில் முன்பதிவு துவங்கியுள்ளதாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close