'தல' அஜித் படத்திற்கான முன்பதிவு தொடங்கியது!

  கண்மணி   | Last Modified : 06 Aug, 2019 11:55 am
reservations-starts-for-nerkondapaarva

தல அஜித் நடிப்பில் திரைக்கு வரவுள்ள திரைப்படம்  'நேர்கொண்ட பார்வை'. இப்படத்தினை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத்,  இப்படத்தை இயக்கியுள்ளார். இசை - யுவன்சங்கர் ராஜா; ஒளிப்பதிவு - நீரவ் ஷா.

அஜித் வழக்கறிஞராகவும், அவருக்கு ஜோடியாக வித்யா பாலனும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 8 ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கான முன பதிவு இன்று முதல் துவங்க உள்ளதாக படக்குழுவின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close